வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் மாதவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சத்யா(எ) சத்யராஜ்(35). இந்நிலையில் சத்யராஜை இன்று ஒரு கும்பல் சேண்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் வைத்துகத்தியுடன் விரட்டியுள்ளனர். பின்னர் கத்தியால் சத்யராஜின் கழுத்துப் பகுதியில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளனர்.
வேலூரில் ரவுடி கொடூர கொலை... முன்விரோதம் காரணமா? காவல்துறையினர் விசாரணை - வேலூர்
வேலூர்: பிணையில் வெளிவந்த ரவுடி தெருவில் ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![வேலூரில் ரவுடி கொடூர கொலை... முன்விரோதம் காரணமா? காவல்துறையினர் விசாரணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2821427-974-f2d09799-1e5f-4177-ac59-0f95b4884547.jpg)
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. உடனே தகவலறிந்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் வேலூர் டிஎஸ்பி பாலசுப்பிரமணியனும் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சத்யராஜ் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்பு தான் அவர் பிணையில் வெளியே வந்ததாகவும் தெரிய வந்தது. மேலும் சத்யராஜின் கொலை முன்விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.