தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகள் கொள்ளை! - 14 shaving gold jewellery robbery near Tirupattur

வேலூர்: திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகள், 65 ஆயிரம் ரொக்கப்பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பூட்டிய வீட்டை திறந்து 14 சவரன் தங்க நகை கொள்ளை!

By

Published : Oct 21, 2019, 11:54 AM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், துரைநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னகேசவலு, லட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினரின் வீட்டு விழாவுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் அருண்குமார் என்பவர், எதேச்சையாக கீழே இறங்கி வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சென்னகேசவலுவுடன் திருப்பத்தூர் நகர காவல் துறையினரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகளையும், 65 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க:

தத்துவாஞ்சேரி ஜாமிஆ பள்ளிவாசல் கொள்ளை - காவல் துறை வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details