வேலூர்:ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு புது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராணி தற்காலிக கிராம தூய்மை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணி நேற்று (நவ.24) தனது உறவினர் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் கந்தசாமி வழக்கம் போல் இரவு காவலாளி பணிக்கு சென்றுள்ளார். இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 8 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு, பின்பு வீட்டிற்கு தீ வைத்து சென்றுள்ளனர்.