தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நளினிக்குப் பரோல் வழங்குவது குறித்து அறிக்கை கோரிய சிறைத்துறை!

வேலூர்: நளினி - முருகனுக்குப் விடுப்பு வழங்கப்பட்டால் அவர்கள் எங்கு தங்கவைக்கப்படுவார்கள்? அவர்களுக்காகச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு வேலூர் மாவட்ட காவல்துறையிடம் சிறைத்துறையினர் கோரியுள்ளனர்.

நளினிக்குப் பரோல் வழங்குவது குறித்து காவல்துறையிடம் அறிக்கை கேட்பு
நளினிக்குப் பரோல் வழங்குவது குறித்து காவல்துறையிடம் அறிக்கை கேட்பு

By

Published : May 29, 2021, 6:44 PM IST

ராஜிவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் நளினி. தற்போது, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள அவர், 30 நாட்கள் விடுப்பு கேட்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், உள்துறைச் செயலாளருக்கும் சிறைத் துறை மூலம் கடந்த மே 26 கடிதம் அனுப்பினார்.

அதில், சென்னையில் உள்ள தனது தாய் பத்மா(81) வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்கவும், கவனித்துக்கொள்ளவும், இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் உயிரிழந்து ஓராண்டு ஆகும்சூழ்நிலையில் அவருக்குச் சடங்குகள் செய்யவும், தனக்கும், மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பிணை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நளினி - முருகனுக்குப் விடுப்பு வழங்கப்பட்டால் அவர்கள் எங்கு தங்கவைக்கப்படுவார்கள், அவர்களுக்காகச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து வேலூர் மாவட்ட காவல்துறையினரிடம் சிறைத்துறையினர் அறிக்கை கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஆ. ராசா மனைவி உயிரிழந்ததாக பரவும் வதந்தி: உண்மை என்ன?

ABOUT THE AUTHOR

...view details