தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கே.எஸ்.அழகிரியை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்..! - Republican Party of India condemned Congress leader K.S. Alagiri

வேலூர்:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியைக் கண்டித்து இந்தியக் குடியரசுக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Republican Party of India
Republican Party of India

By

Published : Nov 29, 2019, 7:03 PM IST

இந்தியக் குடியரசு கட்சியின் மாநிலதலைவர் செ.கு.தமிழரசனை, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவதூறாகப் பேசியதாக கூறி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் இந்தியக் குடியரசுக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மத்திய மாவட்ட தலைவர் தலித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கே.எஸ்.அழகிரியைக் கண்டித்தும், கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய குடியரசு கட்சியினர்

இதில், 50-க்கும் மேற்பட்ட இந்தியக் குடியரசு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக நினைக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details