இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர், அதை சுற்றியுள்ள பகுதிகளில் 31 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில்
17 வீடுகள் பகுதியாகவும், 14 வீடுகள் முழுவதுமாகவும் சேதமடைந்துள்ளன. தொண்டாண்துளசி, சிங்கிரிகோயில், கம்மசமோத்திரம், பல்லலகுப்பம், காட்பாடி, கரசமங்கம், வரதலம்பட்டு, துத்திக்காடு ஆகிய பகுதிகளில் 26.53 ஏக்கர் வாழை, பப்பாளி, நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
வேலூரில் ஏற்பட்ட நிவர் புயல் பாதிப்புகள் குறித்த விவரம் வெளியீடு...! - வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம்
வேலூர்: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ளார்.
25 நிவாரண முகாம்களில் 1021 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 57 மரங்கள் சாய்ந்துள்ளன. வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட திடீர் நகர், சம்பத்நகர், காந்தி நகர், இந்திரா நகர், கன்சால்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிவர் புயலால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வேலூர் மாவட்ட விவசாயத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, நாளை (நவம்பர் 27) மாலை 6 மணிக்குள் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.