திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம், வெள்ளக்கல் காப்புக்காட்டுப் பகுதியில் நேற்று காலை ஆம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது காப்புக்காட்டில் இரண்டு பேர் வெளிமாநில பதிவெண் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரின் படத்துடன் கூடிய கார் ஒன்று நின்றிருந்தது.
அதனருகில் இருசக்கர வாகனத்தில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ள முயற்சித்தனர்.
இந்நிலையில் வனக்காவலர்களை கண்டதும் அவர்கள் தப்பியோடினர்.