தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்குத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் வந்துள்ளது. இதனடிப்படையில், ஆந்திர எல்லையில் காவல் துறையினர் நேற்றிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் மறித்தனர். ஆனால், கார் நிற்காமல் சென்றதால், காவல் துறையினர் அந்தக் காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளனர்.
கடத்தலுக்கு பயன் படுத்திய கார் இந்நிலையில், பச்சூர் சாலை வளைவில் கார் திரும்பும்போது விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே பிடிபட்ட காரில் சுமார் இரண்டு டன் கடத்தல் ரேசன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர், நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் பதுக்கப்பட்ட 800 கிலோ ரேஷன் பொருட்கள் பறிமுதல்