ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சந்தேகத்துக்கிடமான வகையில் சென்ற பொலிரோ வாகனத்தை காவல் துறையினர் மறித்தபோது உள்ளேயிருந்த இருவர் தப்ப முயன்றனர்.
அவர்களைப் பிடித்த காவலர்கள், வாகனத்தை சோதனை செய்தபோது உள்ளே தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் வேலூர் ஆர்.என். பாளையத்தைச் சேர்ந்த அப்புரோஸ் (34), சையத் அமீன் (24) என்பது தெரியவந்தது. மேலும் பெங்களூரிலிருந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை ஏற்றிவந்து காஞ்சிபுரம் எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
இதையடுத்து போதைப் பொருள்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய சோதனையில் நேற்று ஒரு டன் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கொண்டுசென்ற 2 பேர் கைது இதையும் படியுங்க: கோவையில் தொடரும் சந்தன மரத் திருட்டு - திணறும் காவல் துறை!