வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய மாவட்டத்தை தொடக்கி வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘ஆங்கிலேயர் ராணுவத்தில் இடம் பெற்ற பெரிய குதிரைப்படை ராணிப்பேட்டையில் தான் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள வாலாஜா தான் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி ஆகும். இத்தனை சிறப்புமிக்க ராணிப்பேட்டைக்கு இன்று மேலும் ஒரு சிறப்பு. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நேரடியாகவும் மறைமுகவாகவும் வேலை வழங்கும் மாவட்டமாக உள்ளது. இன்னும் பல சிறப்புகளை எதிர்காலத்தில் இந்த மாவட்டம் பெறும்.