தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி! - வேலூர் சிறை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி!
வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி!

By

Published : Nov 12, 2022, 5:07 PM IST

Updated : Nov 12, 2022, 6:58 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏறக்குறைய 31 ஆண்டுகள் கைதியாக இருந்தார். வேலூர் சிறையில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பெண் கைதியாக நளினி பார்க்கப்படுகிறார். உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த ஓராண்டாக பரோலில் வெளியே உள்ளார். காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி!

இந்நிலையில், பரோலில் உள்ள நளினி இன்று காலை காட்பாடி காவல் நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வந்து கையெழுத்திட்டார். பின்னர், வேலூர் சிறைக்கு சென்ற நளினி அங்கு விடுதலை செய்யப்படுவதற்கான ஆணையை பெற்றார். சுமார் 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து மழையில் நனைந்தபடி வெளியே வந்தார். அதேபோல் முருகன், சாந்தன் ஆகியோரும் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:10% இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

Last Updated : Nov 12, 2022, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details