முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் இலங்கையில் உள்ள தனது தாயுடன் காணொலி வாயிலாக பேச அனுமதிக்கப்படாத பட்சத்தில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன் காணொலிக் காட்சி மூலம் பேச அனுமதி கோரி கடந்த 1ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ராஜிவ் கொலை வழக்கு முருகன் 18ஆவது நாளாக உண்ணாவிரதம் - rajiv gandhi murder accused murugan fasting for eighteenth day
வேலூர்: தனது மனைவி நளினியுடன் காணொலிக் காட்சி மூலம் பேசுவதற்கு அனுமதி வழங்கக்கோரி, 18ஆவது நாளாக முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
![ராஜிவ் கொலை வழக்கு முருகன் 18ஆவது நாளாக உண்ணாவிரதம் rajiv gandhi murder accused murugan fasting for eighteenth day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7663554-553-7663554-1592461738399.jpg)
rajiv gandhi murder accused murugan fasting for eighteenth day
அந்த வகையில், இன்று (ஜூன் 18) 18ஆவது நாளாக முருகன் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். முருகனிடம் சிறைத்துறை அலுவலர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை முருகனுக்கு ஐந்து பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... சிறையில் முருகனுடன் நளினி சந்தித்துப் பேச அனுமதி கோரி ஆட்கொணர்வு மனு!