முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி நேற்று தனது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.
வேலுார் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நளினி! - ராஜிவ் காந்தி கொலை வழக்கு
வேலூர்: சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ள நளினி வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
அவர் வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர் இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் பரோலில் வரும்போது உத்தரவாதம் அளித்தபடி தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்படி இன்று காலை 11.30 மணியளவில் நளினி வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் அழகு ராணி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பாக நளினியை அழைத்து வந்தனர்.