ராஜீவ் கொலை குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், இரண்டு மாத பிணைக்கு பிறகு இன்று புழல் சிறைக்கு திரும்பினார். இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இரண்டு மாத பிணை முடிந்து இன்று என் பிள்ளை சிறைக்கு செல்கிறார். கடந்த 29 வருடங்களுக்கு முன்பாக விசாரித்துவிட்டு அனுப்புகிறேன் என்று கூட்டி சென்றார்கள்.
தற்போது அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் வருகின்ற 21, 22ஆம் தேதிகளில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதற்காக மறுபடியும் பிணை நீட்டித்து கேட்டோம், கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். நேற்றுவரை எந்த தகவலும் தெரியவில்லை.