தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினியின் அரசியல் அறிவிப்பு: வேலூர் ரசிகர்கள் கொண்டாட்டம்! - Rajini political entry news

வேலூர்: ரஜினியின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிற்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, வெடி வெடித்து கொண்டாடினர்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு: வேலூர் ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரஜினியின் அரசியல் அறிவிப்பு: வேலூர் ரசிகர்கள் கொண்டாட்டம்!

By

Published : Dec 3, 2020, 5:12 PM IST

கடந்த நவம்பர் 30 அன்று சென்னையில் நடிகர் ரஜினி தலைமையில் நடந்த அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது "எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம்" அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.

இந்நிலையில் இன்று (டிச. 03) நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வேலூர் அண்ணா கலையரங்கம் எதிரே உள்ள பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

வேலூர் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மேலும் ரஜினியை வாழ்த்தியும், அவரை தமிழ்நாட்டி நிறந்தர முதலமைச்சர் என்று கூறியும், கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க...ஒன்றா ரெண்டா வருஷங்கள் எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா?

ABOUT THE AUTHOR

...view details