நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் உலவிவருகின்றன. அவரது ரசிகர்கள், அவரது அரசியல் வருகையை எதிர்பார்ப்போர் அவரை கட்சித் தொடங்க வேண்டி தொடர்ந்து விருப்பம் தெரிவித்தும், சுவரொட்டி ஒட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அண்மையில் "ஓட்டு போட்டா அது ரஜினிக்குத்தான்" என்ற வாசகம் போடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
எங்கள் குடும்ப ஓட்டு ரஜினிக்கே இதனைத்தொடர்ந்து தற்போது வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் "எங்கள் குடும்ப ஓட்டு ரஜினிக்குத்தான்" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் அனைவரது வீட்டிலும் ஓட்டப்பட்டுவருகிறது.
இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ”மக்கள் மத்தியில் ரஜினிக்கு உள்ள வரவேற்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் வீட்டின் உரிமையாளரின் கருத்தை கேட்டு, அனுமதி பெற்று ரஜினிக்கு ஆதரவான ஸ்டிக்கரை ஒட்டிவருகிறோம்.
தொடர்ந்து வேலூர் மாவட்டம் முழுவதும் இதைத் தொடர உள்ளோம்” என்று தெரிவித்தனர்.