தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீ பொழப்புக்கு ரவுடி, நான் பொறந்ததுல இருந்தே ரவுடி- ராஜேந்திர பாலாஜி கர்ஜனை - rajendira balaji

வேலூர்; “திமுகவினர் மட்டும் தான் ரவுடியா நாங்கள் பிறப்பிலேயே அப்படித் தான், எடப்பாடியார் கண்ணசைத்தால் அடுத்த நொடியே திமுகவுக்குச் சாவு மணி அடிப்போம்”, என்று வேலூர் பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி-ஸ்டாலின்

By

Published : Jul 28, 2019, 11:49 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கே.சி வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “ இன்று ஸ்டாலின் குதிக்கிறார், கூப்பாடு போடுகிறார், கெஞ்சுகிறார். ஆனாலும், அவருக்கு முதலமைச்சராக ஜாதக பொருத்தம் கிடையாது.

எட்டு பொருத்தமும் அண்ணன் எடப்பாடிக்கு தான் இருக்கிறது. அடுத்த பொதுத்தேர்தலிலும் எடப்பாடி தான் முதலமைச்சராக வருவார். உனக்கு எட்டு பொருத்தமும் இல்லை எதிர்க்கட்சித் தலைவரா தான் இருக்க வேண்டும். அங்கேயும் சட்டையைக் கிழித்துக் கொண்டு தான் இருக்கவேண்டும்.

ராஜேந்திர பாலாஜியின் பேச்சு

திமுக தலைவர் ஆவதற்காக சதி செய்து சொந்த அண்ணனான அழகிரியைத் தூக்கி எறிந்து திமுக தலைமையைக் கைப்பற்றியுள்ளார். அப்படி குறுக்கு வழியில் எடப்பாடி வந்து முதலமைச்சர் பதவியை பிடிக்கவில்லை. ஸ்டாலின் தன்னை கில்லி என்கிறார், நீ எங்களுக்கு கில்லி அல்ல, சல்லி.

எங்ககிட்ட உன் வேலைய காட்டாத ஒருவேலையும் நடக்காது. எடப்பாடியார் கண்ணசைத்தால் போதும் திமுக கட்சிக்கு சாவுமணி அடித்துவிடுவோம். எங்கள் இயக்கத்தில் ஒவ்வொரு வரும் தளபதிகள், ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு வீர வரலாறு உண்டு. உனக்கு என்ன வரலாறு உண்டு உன் மகனுக்கு நீ சீட்டு கொடுத்தியே முழுவதும் குடும்ப அரசியல் பிள்ளைக்காக உழைப்பவன் மனிதன் கிடையாது.

நாட்டுக்காக உழைப்பவர் தலைவன் அவர்தான் எடப்பாடியார். காட்பாடியார் தன் மகனுக்காக உழைக்கிறார் தன் மகனை நிறுத்தி அழுகிறார், ஓட்டு கேட்கிறார், பிச்சை போடுங்கள் என்று சொல்கிறார், என்னை காப்பாற்றுங்கள் என்கிறார். திமுககாரர்கள் நீங்கள் தான் ரவுடியா? நாங்கள் பிறப்பே அப்படித் தான் நாங்கள் எல்லாவேலையும் செய்வோம். எங்களை மிரட்ட நினைத்தால் உன் அரசியல் வாழ்க்கையை முடித்து விடுவோம் அரசியல் பயணத்தை தொடர முடியாது" என்று ஆவேசமாக பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details