தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாலாறு அணையில் தடுப்பணை கட்ட வேண்டும். விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும், வேலூர் மக்களின் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும். எனவே, பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். இது குறித்து முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வோம். அதற்கு நாங்கள் உதவுவோம்.
ஒத்தைக்கு ஒத்தை வர்றியா... ஸ்டாலினை போட்டிக்கு அழைக்கும் அமைச்சர்!
வேலூர்: ஒத்தைக்கு ஒத்தை பார்ப்பதாக இருந்தால் மெரினா கடற்கரையில் பார்த்துவிடலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது எடப்பாடி ஆட்சிதான் இதற்குக் காரணம். இந்த ஆட்சியை குறை சொல்வது மட்டும்தான் ஸ்டாலினின் வேலை. எவ்வளவு கேவலமாக பேச வேண்டுமோ அவ்வளவு கேவலமாக ஸ்டாலின் முதலமைச்சரை பார்த்து பேசுகிறார். முதலமைச்சரின் வளர்ச்சியை தகர்ப்பதற்காக ஸ்டாலின் காய் நகர்த்துகிறார், அதற்காக தனிப்பட்ட முறையில் எடப்பாடியை அவர் தரக்குறைவாக பேசுகிறார்.
முதலமைச்சரை எங்கு தரக்குறைவாக பேசினாலும் ஸ்டாலினுக்கு சரியான சவுக்கடி கொடுப்போம். அவருக்கு மறுப்பு தெரிவிப்போம். அதிமுக தொண்டர்களை திமுக நெருங்கவே முடியாது. ஒத்தைக்கு ஒத்தை மன்னர் காலத்தில் நடந்ததுபோல் நேர்ந்தால்கூட சந்தித்துவிடுவோம். மெரினா கடற்கரையில் போட்டு பார்த்திரலாம். அதிமுக ஒரு பக்கம், திமுக ஒரு பக்கம் ஒத்தைக்கு ஒத்தை போட்டி வைத்துக் கொள்ளலாம். ஒரு நாளும் அதிமுகவை திமுக வீழ்த்த முடியாது. வாய் பேச்சாக இருந்தால்கூட ஊடகத்தில் வைத்துக் கொள்ளலாம். அதிமுக சார்பில் நான் வருகிறேன், திமுக சார்பில் யார் வேண்டுமானாலும் வாருங்கள். என்றைக்கும் அதிமுகவை திமுகவால் வீழ்த்தவே முடியாது” என்றார்.