தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை சுற்றியுள்ள ஏரிகளின் நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்..! - ராமனஞ்சேரி

Minister Durai Murugan: சென்னை சுற்றி உள்ள ஏரிகளில் ஒரு அடி கொள்ளளவுக்கு நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
சென்னை சுற்றியுள்ள ஏரிகளின் நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 4:03 PM IST

சென்னை சுற்றியுள்ள ஏரிகளின் நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை

வேலூர்:காட்பாடி அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டிற்கான கரும்பு அரவைத் துவக்க விழா இன்று (டிச.14) நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்றுத் துவக்கி வைத்தனர்.

இதனையடுத்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “இந்த ஆண்டு வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் கரும்பு அரவைச் செய்யப்படும். வேளாண்மை பயிர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க, பாலாற்றில் 4 தடுப்பணைகள் மற்றும் பொன்னையாற்றில் ரூ.47 கோடி மதிப்பீட்டில் 4 தடுப்பணைகளும் கட்டப்பட்டு வருகிறது.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்போது அரவைத் துவங்கியுள்ளது. இந்த ஆலையில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பதை, ஆலை நிர்வாகம் பட்டியல் தயாரித்து வழங்கினால் அதனை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு தினக்கூலி உயர்வு குறித்து அதிகாரிகள் இடத்தில் ஆலோசனை செய்யப்படும்.

சென்னையைச் சுற்றி நீர் நிலைகளை உருவாக்கத் தமிழக அரசு நீண்ட காலமாக ஆலோசனை செய்து 2 இடங்களில் தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்று ராமனஞ்சேரி, இங்கு மிகப்பெரிய தடுப்பணை கட்டலாம் என முடிவு செய்யப்பட்டது, இருப்பினும் அங்குள்ள மக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

மற்றொரு இடம் திருக்கழுக்குன்றம் ஏரியில் கடந்த ஆட்சியாளர்கள் தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்தார்கள் ஆனால் முடியவில்லை. எனவே, சென்னை சுற்றி உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் ஒரு அடி கொள்ளளவிற்கு நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைச் செயல்படுத்துவது தொடர்பாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை அளித்த பின்பு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை சுற்றி நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள பகுதிகள் அதிக அளவில் அகற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் எந்த அளவுக்குத் துணிந்து இருந்தால் வாலிபர்கள் கீழே குதித்துப் புகை கொண்டு வீசி இருப்பார்கள், ஒரு குண்டூசி கூட உள்ளே கொண்டு செல்ல முடியா நிலையில், இது போன்ற இச்செயல் கண்டிக்கத்தக்கது. சென்னை வெள்ள நிவாரண நிதி ரூபாய் 6000 உயர்த்தி வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது என்ற கேள்விக்கு இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் பாதிப்பு.. முதலமைச்சருடன் மத்திய குழு இன்று ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details