வேலூர்: கடந்த நிவர் புயலின் போது, வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை அகழியில் அளவுக்கு அதிகமாக நீரின் அளவு உயர்ந்ததால், நீர் வெளியேற வழியின்றி கோட்டையின் உள்ளே உள்ள பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோயில் மூழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. சுமார் 10 நாட்களுக்கு மேலாக வெள்ளம் வடியாததால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
வேலூர் கோட்டையை சூழ்ந்த வெள்ளம்.. அதிரடி நடவடிக்கையில் மாநகராட்சி... - வேலூர் மழை பாதிப்பு
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நீர் தேங்காத வண்ணம் வேலூர் கோட்டை அகழியிலிருந்து, ராட்சத மின் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு வேலூர் மாநகரட்சி நிர்வாகம் சார்பில் கோட்டைக்கு பின்புறம் உள்ள அகழியில் தற்போது மாண்டஸ் புயலால் தேங்கியுள்ள மழை நீரை, 10 Hp அளவுக்கான மின்மோட்டர் பொருத்தப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் ஒரு நிமிடத்துக்கு 2 ஆயிரம் லிட்டர் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோட்டை பின்பக்கம் உள்ள சாலையில் புதைக்கப்பட்ட குழாய் மூலம், அருகில் உள்ள நிக்கல்சன் கால்வாயில் கோட்டை அகழியின் உபரி நீர் விடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:நிரம்பி மறுகால் போன போளிவாக்கம் ஏரி; திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் இடையே போக்குவரத்து பாதிப்பு