வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று பெய்த கனமழையால் வாணியம்பாடி கரிமாபாத் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தில்சாத், அவரது மகள்கள் பாமிலா, அம்ரின், ஜபின் உள்ளிட்ட நான்கு பேர் தலை மற்றும் தோள் பகுதியில் காயமேற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்
வேலூர்: வாணியம்பாடியில் நேற்று பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து
அதன்பிறகு நால்வரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதை நகர காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்