திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பார்சனா பள்ளிப் பகுதியில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சுமார் ஏழு அடி நீள மலைப்பாம்பு உள்ளதாக, வனத்துறையினருக்கு பார்த்திபன் என்பவர் தகவல் கொடுத்தார்.
அத்தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெருமாள் ஆகியோர் நிலத்தில் மின்விளக்கு இல்லாதபோதிலும் டார்ச் லைட்டைப் பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அந்த மலைப்பாம்பை பிடித்தனர்.