வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில் இந்தப் பகுதிக்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பொன்னை - ராணிபேட்டை வழித்தடத்தில் சென்ற இரண்டு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு..!
வேலூர்: குடிநீர் கேட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் கலைந்து போகவில்லை. இதையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டயமாக அப்புறப்படுத்தியபோது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.