வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிப்பதற்காக அம்மனாங்குட்டைக்கு கொண்டுவரப்படுகின்றன. ஆனால் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் தரம் பிரித்த பின்னர் அங்கேயே தீ வைத்து எரித்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை எரிக்கக்கூடாது எனக் கூறி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.