தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலம் ஆர்ஜிதம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மனு - ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம்

வேலூர்: ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

public petition for land issue

By

Published : Oct 29, 2019, 11:49 PM IST

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கீழ்வல்லம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இதன் காரணமாக அங்கு வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நிலம் ஆர்ஜிதம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன் தலைமையில் மனு அளிப்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்தித்து தங்கள் மனுக்களை அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் நிலம் ஆர்ஜிதம் செய்வதால் தாங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் நிலத்தை எடுக்காமல் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் பொதுமக்கள் முறையிட்டனர்.

நிலம் ஆர்ஜிதம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மனு

திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையில் மனுக்களை ஏந்தியவாறு ஒட்டுமொத்தமாக வந்ததால் வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதையும் படிங்க: சுஜித்தின் மரணம் மிகுந்த துயரம்...! - ஆளுநர் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details