வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து கடந்த 28ஆம் தேதி முதல் திருப்பத்தூர் தனி மாவட்டமாக செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும், ஆம்பூர் தாலுக்காவிலிருந்து பிரிக்கப்பட்ட வருவாய் கிராமங்களை மீண்டும் இணைக்க வேண்டும், ஆம்பூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக ஆம்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஆம்பூர் சார் நிலை கருவூலம் எதிரே தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.