தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் உயிரிழந்த கரோனா நோயாளியின் உடலை அகற்றக்கோரி போராட்டம்!

வேலூர் : அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கரோனா நோயாளியின் உடல் பல மணி நேரமாகியும் அப்புறப்படுத்தப்படாததால், பிற நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் உயிரிழந்த கரோனா நோயாளியின் உடலை அகற்றக்கோரி போராட்டம்!
வேலூரில் உயிரிழந்த கரோனா நோயாளியின் உடலை அகற்றக்கோரி போராட்டம்!

By

Published : May 21, 2021, 7:51 AM IST

வேலூர் ஜி.பி.எச் சாலையில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 70 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (மே.20) இரவு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த 67 வயது மதிக்கத்தக்க கரோனா நோயாளி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆனால், பல மணி நேரமாகியும் இறந்தவரின் உடல் அப்புறப்படுத்தப்படவில்லை.

பிற நோயாளிகளுக்கு மத்தியிலேயே இறந்தவர் உடல் நீண்ட நேரம் கிடந்தது. இதனால் கோபமடைந்த பிற நோயாளிகள், உடலை அகற்றக்கோரி காலை உணவு உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு உயிரிழந்தவரின் உடல் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பு கூறுகையில், “இறந்தவர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேலும் இரவு நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதனால் ராணிப்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் அங்கு இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யவும் சற்று தாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே உடலை அகற்ற தாமதமானது” என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : ’கரோனாவால் பலியான காவலர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு’ - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details