வேலூர்:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள தனது தாய் பம்மாவுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், இதே வழக்கில் வேலூர் மத்திய சிறையிலுள்ள தனது கணவன் முருகனை இன்று (மே 20) நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
இதற்காக நளினி தங்கியுள்ள காட்பாடி பிரம்பபுரம் பகுதியில் இருந்து பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். இது 15 நாள்களுக்கு ஒரு முறை நடக்கும் வழக்கமான சந்திப்பு ஆகும். மேலும் முருகன் தனக்கு 6 நாள் பரோல் வழங்க கோரி இன்றோடு 20ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.