திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சேட்டு(23). கடந்த ஆண்டு திருப்பத்தூர் பகுதியில் வீடு புகுந்து பணம், நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் கடந்த மாதம் அக்டோபர் ஒன்றாம் தேதி வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஆக 19) சேட்டுக்கு திடீரென சிறையில் வலிப்பு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். விசாரணைக் கைதி ஒருவர் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.