வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாந்தகுமார் (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சாந்தகுமாரை கடந்த 4ஆம் தேதி போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.