தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்! - velur district

வேலூர்: மாவட்ட குழந்தைகள் உதவி எண் (Childline) அலுவலகத்திற்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற இருந்த குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்

By

Published : Feb 24, 2021, 11:01 AM IST

வேலூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற இருந்த குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட குழந்தைகள் உதவி எண் அலுவலகத்திற்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் நாளை (பிப். 25) நடக்க இருந்த குழந்தைத் திருமணமும், காட்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 25 வயது இளைஞருக்கும் இன்று (பிப். 24) நடைபெற இருந்த குழந்தைத் திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டக் குழந்தைகள் உதவி எண் (Childline) அலுவலகத்திற்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் இவ்விரு குழந்தைத் திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து சிறுமிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:ஓசூர் அருகே குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details