தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முதல் 4 ரயில்கள் தாமதமாக செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு - southern railway

வேலூர் : அரக்கோணம் - ஜோலார்பேட்டை  மார்க்கத்தில் பராமரிப்பு பணி நடக்கும் காரணத்தால் அந்த வழியாக செல்லும் நான்கு ரயில்கள் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .

4 ரயில்கள் தாமதம்

By

Published : Jun 12, 2019, 5:45 PM IST

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கோணம் - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ள காரணத்தினால் நாளை முதல் 15ஆம் தேதி வரை , நான்கு ரயில்கள் தாமதமாக செல்லும்.

நாளை முதல் 4 ரயில்கள் தாமதமாக செல்லும்

13-06-19 அன்று கிளம்பும் வண்டி எண் : 12970 ஜெய்ப்பூர் - கோவை வாராந்திர அதிவிரைவு ரயில் வாலாஜா சாலையில் இருந்து 110 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்,13-06-19 அன்று கிளம்பும் வண்டி எண்: 12245 ஹவுரா - எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் தலங்கையில் இருந்து 105 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்,14-06-19 அன்று கிளம்பும் வண்டி எண் : 12552 கமக்யா - எஸ்வந்த்பூர் வாராந்திர ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா சாலையில் இருந்து 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் மற்றும் 15-06-19 அன்று கிளம்பும் வண்டி எண் : 12245 ஹவுரா- எஸ்வந்த்பூர் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா சாலையில் இருந்து 95 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details