தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு:வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த விசாரணை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொன்முடி மீதான வழக்கு 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான வழக்கு 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By

Published : Jan 3, 2023, 7:37 PM IST

வேலூர்மாவட்டத்தில்உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவ்வழக்கு வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 07.11.2022 முதல் நடைபெற்று வருகிறது.

இன்று(ஜன.03) வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல் துறையினர் அஜராகினர். இவ்வழக்கின் சாட்சியங்களான 25, 41, 90, 99, 142, 143, 151, 153 ஆகிய எண்கொண்டோர் தேவையில்லாத சாட்சியங்கள் என்பதால், அவர்களை நீக்கக்கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து இவர்களை நீக்கிய நிலையில் மற்ற சாட்சியங்களை அழைத்து வரும்படி,வேலூர்முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இவ்வழக்கில் A1, A2ஆன அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டெல்லி இளம்பெண் கொலை: டூவீலரில் இருந்த மற்றொரு பெண் யார்? - பகீர் கிளப்பும் பின்னணி

ABOUT THE AUTHOR

...view details