திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்திற்குப் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. மேலும், மக்கள் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால், நெக்னாமலையில் இருந்து மலையடிவாரம் வரை ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, பின்னர் அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியில் இருக்கும் அரசு நியாய விலை கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரித்த பின்னர், புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் சிவனருள் உத்தரவின் பேரில் அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு, வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் பணத்தையும் சேர்த்து, பொங்கல் பரிசுத் தொகுப்புகளை முதல் முறையாக கிராமத்திற்கே சென்று அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.