தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி! - வாக்கு இயந்திரங்கள்

வேலூர்: பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

machine

By

Published : Feb 6, 2019, 6:17 PM IST

பாராளுமன்ற பொதுத்தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அந்தவகையில் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தொகுதிவாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் பெங்களூர் பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் கலந்துகொண்டு மின்னணு எந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

machine

குறிப்பாக இயந்திரத்தில் பேட்டரி பொருத்துவது எப்படி, தேர்தல் நேரத்தில் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தும் புதிய வசதி குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர். வேலூர் மாவட்டத்தின் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான 130 வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details