தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதுக்கிவைத்திருந்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்! - செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர்

வேலூர்: காட்பாடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் செம்மரக்கட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

குடோனில் பதுக்கிவைத்திருந்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
குடோனில் பதுக்கிவைத்திருந்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

By

Published : May 19, 2020, 11:58 AM IST

வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை பிடிக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதனையடுத்து வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் நேற்றிரவு ரவுடி ஜானியின் நெருங்கிய கூட்டாளியான காகிதபட்டறையைச் சேர்ந்த ராஜா என்பவரை விசாரிப்பதற்காக காவல் துறையினர் சென்றபோது, அவர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும், அவரிடம் நடத்திய திவீர விசாரணையில், காட்பாடி அடுத்த சில்க் மில் பகுதி அரவிந்த் நகரில் உள்ள குடோனில் செம்மரம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, காட்பாடி காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான விருதம்பட்டு காவல் துறையினர் அந்தக் குடோனில் நடத்திய சோதனையில் சுமார் 1 டன் செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்து. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் - ஏழு பேரை தேடும் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details