வேலூர் மாவட்ட ஜோலார்பேட்டை பகுதியில் ரயில்வே சிக்னல் வயர் பதிக்கும் ஒப்பந்ததாரர் கிரி. இவரிடம், சென்னையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார் . இவர் ஜோலார்பேட்டை கொடியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ரயில்வே மேற்பார்வையாளர் ஓட ஓட வெட்டி படுகொலை; குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - Murder in vellore
வேலூர்: ரயில்வே ஒப்பந்ததாரரிடம் மேற்பார்வையாளராக வேலை செய்தவரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம், ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![ரயில்வே மேற்பார்வையாளர் ஓட ஓட வெட்டி படுகொலை; குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! police-investigation-about-the-jolarpet-murder](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5188031-thumbnail-3x2-murder.jpg)
police-investigation-about-the-jolarpet-murder
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியப் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரக் கொலை!