வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அசோகன், வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் நேற்று காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்ற வடக்கு மண்டல காவல் துறை தலைவர் (ஐஜி) நாகராஜன் திடீரென உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி நேற்று முதல் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதற்கான காரணம் என்ன என்பது வெளியிடப்படவில்லை. ஒரே நேரத்தில் காவல் துறையில் அதிகாரமிக்க அலுவலர்கள் இரண்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் காவல் துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரித்தபோது, காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த அசோகன், நாகராஜ் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களுக்குத் துணைபோனதாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக சூதாட்டம், மணல் கொள்ளை, குட்கா விற்பனை வேலூரில் கொடிகட்டி பறக்கிறது.