வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள், ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதற்காக ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் எஸ்பி மனோகரன் தலைமையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த காவலர் படுகாயம்! - அரக்கோணம்
வேலூர்: அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

வேலூர் அருகே மாடிப்படியிலிருந்து தவறி வழுந்த காவலர் படுகாயம்!
பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார்(32), மாடிப்படியிலிருந்து கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் சக ஊழியர்கள் அவரை மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
Last Updated : May 25, 2019, 9:28 AM IST