வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகொண்ட வனப் பகுதியில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் இணைக்கும் சோதனை சாவடி அமைந்துள்ளது. அவ்வழியாக வருகின்ற வாகன ஓட்டிகள், வனப்பகுதி சாலையோரங்களில் இருக்கும், குரங்குகளுக்கு அன்றாடம் தாங்கள் கொண்டுவரும் உணவுகளை கொடுப்பது வழக்கமாக நடைப்பெற்றுவந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அவ்வழியே செல்லவில்லை. இதனால் அங்குள்ள குரங்குகள் உணவின்றி மிகவும் சோர்வடைந்து காணப்பட்டது. இதையடுத்து சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், சோர்வடைந்து காணப்பட்ட குரங்குகளுக்கு, அங்கேயே உணவு சமைத்து வழங்கியுள்ளனர்.