வேலூர் மாவட்டம் குடியாத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் செல்போனில் உறவினரிடம் பேசிவிட்டுத் தருவதாகக் கூறி செல்போனை தினேஷிடம் வாங்கியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் திடீரென்று அங்கிருந்து செல்போனுடன் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தினேஷ் புகாரளித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் ஆம்பூர் நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களைக் கண்காணித்துவந்தனர். இந்நிலையில், காவல் துறையினர் தினேஷிடம் அவரது செல்போன் எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறித்தினர். அதன்பேரில், தினேஷ் தனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த நபரிடம் பேசி ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்த நபர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் செல்போனை கொடுக்க முற்படும்போது, அங்கு மறைந்திருந்த காவலர் சுரேந்திர குமார் அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட அந்த நபர் செல்போனை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இருப்பினும் காவலர் சுரேந்திர குமார் அவனை பின்தொடர்ந்தது விரட்டிச் சென்றுள்ளார்.