தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை வாலிபர் படுகொலை தொடர்பாக 5 பேர் கைது- மேலும் இருவருக்கு வலைவீச்சு! - John Franklin death news

சென்னை அரக்கோணம் ரயில் நிலையத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் இரண்டு முக்கிய நபர்கள் உள்ளதால் அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Etv Bharaசென்னை வாலிபர் படுகொலை! மேலும் இருவருக்கு வலைவீச்சுt
Etv Bharatசென்னை வாலிபர் படுகொலை! மேலும் இருவருக்கு வலைவீச்சு

By

Published : Aug 10, 2023, 12:25 PM IST

வேலூர்: அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னையை சேர்ந்த 5 நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் மேலும் முக்கிய நபர்கள் இருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நகர காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிராங்கிளின். இவர் கடந்த ஒரு மாதமாக ஏ.பி.எம். சர்ச் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி இரவு அரக்கோணம் ரயில்வே ஜங்ஷன் அருகே நடைபயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்.

பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளினை நகர காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பிராங்கிளின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதையும் படிங்க:சிறுமியை முட்டி பந்தாடிய மாடு; நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

இந்நிலையில் கொலை செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த ராகுல்(22), திவாகர்(21), அரக்கோணம் புதுப்பேட்டையை சேர்ந்த சத்யா(22), புளியமங்கலத்தை சேர்ந்த செல்வம்(25), அம்மனூரை சேர்ந்த தர்மேஷ்(20) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணை செய்ததில் மேலும் முக்கிய நபர்கள் இருவர் உள்ளதால் அவர்களை நகர காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் விசாரனையில் கஞ்சா விற்பனையில் ஏரியா பிரிப்பதில் இரு பிரிவினர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக, பல நாட்களாக ஜான் பிராங்கிளினை தேடி வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் அரக்கோணத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மேலும் கொலைக்கு மூலதனமாக இருந்து செயல்பட்ட முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும், கொலையாளிகளிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தும் அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Jailer FDFS: வெளியானது ஜெயிலர்... தியேட்டர்களை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்!!

ABOUT THE AUTHOR

...view details