வேலூர்: அண்ணா சாலையில் உள்ள லட்சுமி திரையரங்கம் அருகே வேலூர் தெற்கு காவல் துறையினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்ததில், அவர்களிடம் சந்தன மரக் கட்டைகள், கத்தி, வாள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மணிகண்டன் என்பவர் தப்பியோடிய நிலையில், சந்தன மரக்கட்டைகளை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியினைச் சேர்ந்த ராஜசேகரன்(28), என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 20 கிலோ சந்தன மரக் கட்டை, இருசக்கர வாகனம், கத்தி, வாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் இதனை வேலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.