வேலூர் மாவட்டம்அல்லேரி மலைப்பகுதியில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 4,700 லிட்டா் சாராய ஊறல்கள் இன்று (ஜன.21) அழிக்கப்பட்டன. அணைக்கட்டு வட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில் அதிகளவில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க, போலீசார் தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மாவட்ட கலால் பிரிவு காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீசார் இன்று அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.