ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த பாமக நிர்வாகி லட்சுமணன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் குறித்து முகநூலில் தவறாக கருத்து பதிவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்காக ஆற்காடு காவல் நிலையம் வந்திருந்தார்.
காவல் நிலைய வளாகத்தில் 'சும்மா கிழி' டிக் டாக் செய்த பாமக நிர்வாகி - தலைக்கு தில்ல பார்த்திங்களா?
வேலூர்: பாமக நிர்வாகி ஒருவர் விசாரணைக்காக சென்றபோது, காவல் நிலையத்தில் வைத்து டிக் டாக் செய்து வெளியிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
காவல் நிலையத்தில் விசாரணையை முடித்துவிட்டு வெளியே வரும்போது டிக் டாக் செய்வது போல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அவர், ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள தர்பார் படத்தின் ,"சும்மா கிழி" என்ற பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார்.
வழக்கின் விசாரணைக்கு வந்த ஒருவர் காவல்நிலைய வளாகத்திலேயே தைரியமாக டிக்டாக் செய்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே, டிக் டாக் செய்த பாமக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.