தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.கே. மணி ! - tirupattur new dist announcement

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து உடனடியாக செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.கே. மணி  திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்  tirupattur district news  tirupattur new dist announcement  gk mani congratulated the tamilnadu chief minister edapadi palanisamy
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.கே. மணி

By

Published : Nov 30, 2019, 9:48 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூரையடுத்த ஹவுசிங்போர்டிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. டி.கே. ராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு, உள்ளாட்சித் தேர்தல், பாமக மகளிர் மாநாடு, திருச்சியில் நடைபெறவுள்ள அக்கட்சியின் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரவிருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். அதிமுக தலைமையிலான கூட்டணி பலமான கூட்டணி மற்றும் வெற்றி கூட்டணியாகும். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் வெற்றி பெற்றதைப்போல உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.கே. மணி

வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டம் என மூன்றாகப் பிரித்து அறிவித்து, அதனை அறிவிப்போடு நிறுத்தாமல் உடனடியாக செயல்படுத்தியமைக்கு பாமக தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது" என்றார்.

இதையும் படிங்க: ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்ட வழக்கு - குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details