வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகேவுள்ள கேசவபுரம் கிராமத்தில் நேற்று (பிப். 23) எருது விடும் விழா நடைபெற்றது. அச்சமயம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலரை மாடு முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.
இதில் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த செல்வம் (62) என்ற முதியவர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மீட்ட அருகிலிருந்தவர்கள், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.