திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதி ஆப்பு கொட்டாய் வட்டத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிரத்தினம் (45). இவர் இன்று காலை ஜெல்லியூர் பகுதியில் சாலை ஓரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி, இவர் மீது மோதியுள்ளது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த முனிரத்தினம், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுெகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், முனிரத்தினம் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், ஒருவழிச்சாலையான இச்சாலையில் லாரி ஓட்டுநர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 4 பேர் படுகாயம்