வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கல் புதூரில் காட்பாடி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை மடக்கி சோதனையிட்டதில், காரில் இருந்தவர்கள் ஆந்திராவிற்குச் சென்று செம்மரக் கட்டை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஸ்கார்பியோ காரில் செம்மரம் வெட்டச் சென்ற ஏழு பேர் கைது! - செம்மரம்
வேலூர்: ஆந்திர மாநிலத்தின் எல்லைப்பகுதியான காட்பாடியில் செம்மரம் வெட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த ஏழு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
செம்மரம்
இதனையடுத்து, காரில் இருந்த வெங்கடேசன்(32), ராதாகிருஷ்ணன்(28), ஐயப்பன்(28), நாகராஜ்(33) கோவிந்தராஜ்(27), ஏகாம்பரம்(30), பிரகாஷ்(28) ஆகிய ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.