வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளியான இவர் கடந்த 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். முன்னதாக, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சென்னை புழல் சிறைக்கு இவர் மாற்றப்பட்டார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தை குயில்தாசனை பார்க்கவும் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் பேரறிவாளனுக்குப் பரோல் வழங்க தமிழ்நாடு அரசுக்கு அவரது தாய் அற்புதம்மாள் சார்பில்கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று 12 மணி அளவில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்குச் சென்றார்.